Description
எனது முதல் புத்தகமான ‘உள்ளம் உருகுதே!’..என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கப் போகும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இது பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கிய புத்தகம்.
என் வாழ்வில் நான் பார்த்த, கேட்ட, ரசித்த, என் மனதைப் பாதித்த.. விஷயங்களையே கதைகளாக்கி.. நம்மோடு வாழும் சக மனிதர்களையே கதாபாத்திரங்களாக்கி.. அன்பு, பாசம், காதல், குடும்பம், சமூகம் என்று நீங்கள் விரும்பும் அத்தனை வகைகளிலும் இந்தப் புத்தகத்தைப் படைத்துள்ளேன்.
இதை வாசித்த பின்..உங்களில் சிலரது உள்ளங்களையாவது என் கதைகள் உருக்குமாயின்..அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாய் பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
நன்றி வணக்கம்.