Description
Dr. ராதா சீனிவாசன் அவர்கள் யோகா துறையில் 15 வருடம் அனுபவம் பெற்றவர். யோகா துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு யோகா நிறுவனங்களில் யோகா ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மற்றும் பல பள்ளிகள், அலுவலகங்கள், கல்லூரிகளில் யோகா வகுப்புகள் நடத்தியுள்ளார். மற்றும் பல வருடங்களாக பல்வேறு உடல் உபாதைகள் உள்ளவர்கள் பலருக்கு யோகா ழூலம் சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.
பல்வேறு உடல் உபாதைகளுக்கு யோகா மூலம் சிகிச்சை அளிக்கும் நோக்கோடு “யோகா நிவர்த்தி” என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.
அதன் முதற் கட்டமாக, தற்போது நீரிழிவு எனப்படும் டயாபடீஸ் (Diabetes) நோய் வராமல் தடுப்பதற்கும், வந்தவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் உதவும் வகையில் “டயாபடீஸ் யோகா சாதனா” என்ற ஒரு பிரத்தியேக பயிற்சியை வடிவமைத்து வழங்கி வருகிறார்.
டயாபடீஸ் உள்ளவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உதுவுவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
இப்பயிற்சியை YogaNivarthi.com -ல் ஆன்லைன் (online) வகுப்புகள் மூலம் Dr. ராதா சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலோடு கற்றுக்கொண்டு இப்புத்தகத்தில் உள்ள குறிப்புகளை கொண்டு அன்றாட வாழ்வில் யோகா, தியானம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின் பற்றுவதன் மூலம் டயாபடீஸ் நோயை தவிர்த்து ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.